
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பழைய பொலிஸ்நிலைய வீதியை வதிவிடமாகவும் கொண்ட வைகுந்தம் காமாட்சி அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, கைலாயபிள்ளை, சிவசம்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வைகுந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
புனிதமலர்(ஓய்வுநிலை ஆசிரியை), குணதீசன்(ஜேர்மனி), நிர்மலா, வனஜமாலா(ஜேர்மனி), சிறீசந்திரகாந்தன்(கனடா), சசிகலா(ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகநாதன்(ஓய்வுநிலை உப அதிபர்), மெஸ்ரல்(ஜேர்மனி), சண்முகலிங்கம்(ஓய்வுநிலை உப அதிபர்), உபேந்திரன்(ஜேர்மனி), சிவகாமினி(கனடா), காலஞ்சென்ற இரவிராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தினேஸ்குமார்- கபாலினி, பவதினி, ஜுடிட், சிம்யோன், விஷ்ணி, யதுஸ், பிரவீனா, உதிஷ்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டோசாயினி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.