யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை வியாபாரிமூலை பழவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் சோமசுந்தரம் அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேல் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெகதீஸ்வரி(கனடா), ரதீஸ்வரி(இங்கிலாந்து), சசிகலா(பிரான்ஸ்), நளாயினி(யாழ்ப்பாணம்), காந்தரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவநாதன், மகாராஜா, தெய்வேந்திரராஜா, துஷ்யேந்திரராஜா, கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வெற்றிவேல், கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வேலாயுதம், நாகம்மா, ஆறுமுகம், தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்சனா, சரண், சரண்ஜா, துவாரகன், சபிதா, சாருஷன், தர்ஷன், றொசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You will always be remembered no matter what. Your presence, love and kindness will forever be with us. Rest for now until we meet again