

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Flekkefjord ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயமூர்த்தி செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதய்யா
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்!
துன்பத்தில் நாம் துவளும் போதெல்லாம்
உங்கள் துணிவும் துவளாத மனமும்
இன்பத்திலும் துன்பத்திலும் எப்போதும் சிந்தை தளராத
செயலுறுதியும் வந்து எம் மனக்கண்ணில் கலங்காதீர்
மக்காள் எனக்கரங்கள் அணைக்குதே!
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை
உங்கள் பிரிவைத் தாங்குமோ எங்கள் இதயம்
எத்தனை ஆண்டானாலும் எம் அப்பா
உங்களை எப்படி நாம் மறப்போம்!
ஆண்டொன்று ஆனதய்யா
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.