5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் உருத்திராதேவி புவனேந்திரன்
வயது 68
அமரர் உருத்திராதேவி புவனேந்திரன்
1948 -
2016
கோப்பாய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த உருத்திராதேவி புவனேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டைந்து போனதம்மா
அன்னையுனை நாம் பிரிந்து
மாண்டழிந்து போனாலும்
மறக்க மாட்டோம் எம் அன்னையை
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
சோகம் தாங்காமல் தவிக்கின்றோம்
எங்கே? உன் தாய் மடியம்மா
ஐந்து ஆண்டு போனாலும்
ஆறவில்லை எம் கவலை
எம் கவலை சொல்லியழ
பூமிதனில் யாருமில்லை
ஈசனவன் காலடியில் என்றென்றும்
வாழ்ந்திடம்மா உன் நேசம் மறவாது
நிழலாக நாமிருப்போம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்