திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கணுக்கேணி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட உமாபதி திருக்குமார் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உமாபதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அழகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமலதா(கலைமகள் வித்தியாலய ஆசிரியை), கேமலதா(லண்டன்), ஸ்ரீலதா(அதிபர் முறிப்பு தமிழ் வித்தியாலயம்), பிரதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமலதாஸ், ரபேந்திரன்(லண்டன்), சுதாகரன், றமேஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வித்ஜா, கேதுர்ஷா, மீனுஜா(லண்டன்), சாணுஜா(லண்டன்), ரிந்துஷா, கிதுசாந், பிரீத்தி, ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஷாம்சன், துருவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
மரியம்மா, காலஞ்சென்ற மனோன்மணி, சிலோன்மணி, ராணி, சுகுமார், காலஞ்சென்ற காந்தன், வசந்தகுமாரி, இந்துராணி, ரஞ்சினிதேவி, கண்மணிராதா, கிளி, கலா, சுசீலா, பேரின்பமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசாத்தி, காலஞ்சென்ற செல்லமுத்து, துரைராசா(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான மல்லிகா, வெலிச்சோர் மற்றும் அசோக்குமார், மனுவேற்பிள்ளை, சூசைமேரி, சாந்தி, தியாகராசா, இராசதுரை, கந்தசாமி, நடராஜா, சிவராசா, யேசுராசா, ஜெசின்குமார், துரைசிங்கம், கனிஸ்ரா, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கணுக்கேணி மேற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details