யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த துஷ்யந்தன் சகாதேவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-01-2022
ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள்
அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள்
நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை
விட்டு அகலவில்லை அப்பா!
அன்பின் திருவுருவே மகனே!
அலையும் அடித்து ஓய்ந்தது காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே..எம் செல்லம்
கால் பதித்த போது காத்திருந்து
காலனவன் சதி செய்தானே?
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய் இவ்வுலகை விட்டு....?
தூணாக காலமெல்லாம்
காத்திடுவாய் என இருந்தோம்
காலன் அழைத்தவுடன்
கறைந்ததேனோ காற்றோடு?
வானம் விரிந்திங்கு
வண்ண மழை தூவினாலும்
காணும் உறவெல்லாம்
கைகொடுத்து உதவினாலும்
அப்பா உங்கள் உறவு
இப்போதில்லை என்ற உணர்வு
அனலாய் எறிக்குதப்பா
அகிலமே வெறுக்குதப்பா!
நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா...
அன்பின் திருவுருவே மகனே!
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே..எம் செல்லம்
கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய்
இவ்வுலகை விட்டு....?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!