யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா பாக்கியநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் கடந்தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்
அன்பென்ற சொல்லின் அர்த்தமும் மறந்துவிட்டது உங்கள் மறைவுடனே
உண்ணும் உணவும் சுவை இழந்துவிட்டது போல்
உணர்கின்றோம் உங்கள் கைகள் படாததனால்
கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார்
அருள் வேண்டி பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி !
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK