
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புதிய கச்சேரியடியை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா குகதாசன் அவர்கள் 05-10-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா(கமலா ஸ்ரூடியோ உரிமையாளர்), அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், தர்மலிங்கம்(கோபி ஆட்டோ) அவர்களின் அன்பு மருமகனும்,
மாலா(முன்னாள் தட்டெழுத்தாளர், பரந்தன் இராசாயன கூட்டுத்தாபனம், எழுதுவினைஞர் செஞ்சிலுவைச் சங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவனேசன்(காரைதீவு), காலஞ்சென்ற குமாரதாசன், திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- ஏழாலை மகா வித்தியாலயம்), புனிதவதி(ஏழாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேம்நாத்(கமலா ஸ்ரூடியோ- கிளிநொச்சி), கலா(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- கட்டிடத் திணைக்களம், கிளிநொச்சி), லதா(கிளிநொச்சி), ரகுநாத்(பொறியியலாளர்- லண்டன்), கோபிநாத்(சுகாதாரத் திணைக்களம்- வவுனியா), கருணா(ஓய்வுநிலை ஆசிரியர்- கல்முனை/பற்றிமா கல்லூரி), ஆனந்தகெளரி(உதவிக்கல்விப் பணிப்பாளர்- தீவகம்), செல்வரட்ணம்(அலுவலக உத்தியோகத்தர்- யாழ்/பரியோவான் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகேந்திரன்(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடம்), சிவஞானம்(ஓய்வுநிலை ஆசிரியர்- கிளி/ புதுமுறிப்பு விக்னேஸ்வரா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஸ்ரீமதி(கிளிநொச்சி), தயாளினி(லண்டன்), சுகன்யா(மாவட்ட பொது வைத்தியசாலை- வவுனியா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
துவாரகன், துஷ்யந்தன், சாமந்தி, சேந்தன், தக்ஷாயனன், சசிரேகா, தர்ஷிக்கா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
லகுவணா, நர்த்தனா, துவீபன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அனுஷியா, சஞ்சீவ்ராய், கரன்சன், மயூரிகா, அபிராமி, பகீரதி, பிரகதீஸ்வரன், காலஞ்சென்ற பிரகலாதன், துவாரகா, டர்ணிக்கா, கபில்நாத், சுயனிக்கா, லதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.