
திருகோணமலை சல்லி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி தியாகராஜா அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று Liverpool பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி பூபதிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், சரவணமுத்து, காலஞ்சென்ற சௌந்தரம்மா தம்பதிகளின் மருமகனும்,
விக்னேஸ்வரி(மணி) அவர்களின் கணவரும்,
காலஞ்சென்ற ரஞ்சித்குமார்(சபேஸ்), ரவிக்குமார்(சதீஸ்), நவீன்குமார்(சீனு) ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல், தங்கவேலாயுதம், தங்கலெட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
யோகேஸ்வரி, திருமஞ்சணம், ராசதுரை, சாரதாதேவி, அழகுதுரை, அண்ணாத்துரை, காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும் குணமணி, சரஸ்வதி, சூரியலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
பிருந்தாவதி(கலா) அவர்களின் உடன்பிறாவாச் சகோதரரும்,
சர்மினி, நிவேதா ஆகியோரின் மாமனாரும்,
லோஜித், கியூசிகா, ஜித்விக் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.