யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி சிவகுருநாதன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி மங்களநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி மங்கையர்கரசி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
விக்கினேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுரேந்திரகுமார்(அரச நில அளவையாளர் பிரதேச நில அளவை காரியாலயம்- மதவாச்சி), உமைபாலன்(பிரான்ஸ்), தனுஷா(விசாரணை அதிகாரி- கிளிநொச்சி), அனுசியா, பவதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம் வவி கிழக்கு பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி(ஆசிரியை தெமுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம், கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம்), தனச்செல்வி(பிரான்ஸ்), முகுந்தன்(அதிபர் கல்மடு மகா வித்தியாலம், வவுனியா), கரிதாஷ், ஜெசிந்தன்(ஆசிரியர் கோண்டாவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திருவருட் செல்வி மற்றும் புவனேஸ்வரி, அமிர்தகெளரி(கனடா), செந்தில்நாதன்(இந்தியா), குலசபாநாதன், காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் ஞானசரஸ்வதி, வேதநாயகி, கிரிசாம்பாள் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் சபாநாதன்(ஜேர்மனி), பங்கஜவதனி(ஜேர்மனி), குபேரரதி(லண்டன்), காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் பரமேஸ்வரன், காலஞ்சென்ற முருகதாஸ் மற்றும் பராபரிதேவி, மகேஸ்வரி, பத்மலோசினி, காலஞ்சென்றவர்களான நடராசா, மகாலிங்கம் மற்றும் கோகுலராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரிஷ்னா, நிருஷயன், தியாஸ், அஸ்வின், மதுஷன், ஜசிகா, அபினவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல 63C பிரதான வீதி,
உக்குளாங்குளம்
வவுனியா.