

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham இல் வாழ்ந்தவருமான துரைசாமி மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-02-2025
காலச்சுழலில் ஓராண்டு ஓடி
மறைந்து விட்டாலும் தந்தையே
எங்கள் புன்னகையிலும் உரையாடல்களிலும்
செயல்களிலும் ஆழமாக பதிந்து இருக்கிறீர்கள்
ஒவ்வொரு விடியலிலும்
இரவுப் பொழுதுகளிலும்
மழையிலும் பனியிலும்
உங்களை உணர்கிறோம்
உங்கள் அன்பு, சிரிப்பு, அணுகல்
உங்கள் வார்த்தைகள் எல்லா
தருணங்களிலும் எல்லா நேரங்களிலும்
எம் மனதை நிறைத்துக் கொண்டிருக்கின்றன
நீங்கள் மனத் திருப்தியுடன்
மௌனமாய் உறங்கி விட்ட போதும்
உங்கள் குரல் காற்றோடு வந்து
காதோரம் கேட்கிறது
ஒளிக்கீற்றாய் நீங்கள் எப்போதும்
எம் வாழ்வில் பிரகாசிக்கிறீர்கள்
எம்முடன் நீங்கள் அருகிருந்த பொழுதுகள்
இப்போது நிமிடங்கள் விரியும் நினைவுகளாய்;
கண்களில் உங்கள் முகம் நிழலாடுகிறது.
நெஞ்சம் வலிக்கின்றது.
கண்ணீர் நிரம்பிய இதய அஞ்சலியுடன்
நினைவுகள் சுமந்து வாழ்கிறோம் தந்தையே
உங்கள் ஞாபகங்கள்
எப்போதும் நல் வரமே