Clicky

21ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 JAN 1934
இறப்பு 01 FEB 2026
திருமதி துரைரட்ணம் அன்னலட்சுமி
வயது 92
திருமதி துரைரட்ணம் அன்னலட்சுமி 1934 - 2026 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
21ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் அன்னலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உனைப் பிரிந்து இன்றோடு நாட்கள் முப்பதொன்று
ஆகிவிட்டது ஆனாலும்
உன் முகம் மறக்க ஒருபோதும்
எம்மால் முடியவில்லை

தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!

உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம் 
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே..

இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம் 
மனம் மட்டும் மௌனித்து 
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை

நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும் எம்முடன் நிரந்தரம் தான்

நீங்காத உன் நினைவுகளையும்
சுமந்தபடி பிள்ளைகள்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 21-02-2026 சனிக்கிழமை அன்று மு.ப 04:30 மணியளவில் முகத்துவாரம் புனித தீர்த்த கரையிலும் வீட்டு கிருத்திய நிகழ்வுகள் காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் பின்னர் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலை 11:00 மணியளவில் ஆத்ம சாந்தி பூஜை பிரார்த்தனை வழிபாடுகளும் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன் நிகழ்விலும் கலந்துக்கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். நன்றி!!

முகவரி:
NO 23 Vaverset Place,
Wellawatta,
Colombo- 06.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.