

யாழ். இடைக்குறிச்சி வரணியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Forde, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா இராசக்குமரன் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முன்னாள் சாவகச்சேரி பிரதேசபையின் தவிசாளரும், ஓய்வு பெற்ற வரணிக் கொத்தணி அதிபர் துரைராசா உமாமகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தேவகுமார் இரத்தினசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜீந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
மியூனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
திருக்குமார், செந்தில்குமரன், சியாமளா, இளங்குமரன், குன்றக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீரஞ்சினி, கெளசலை, தாமோதரன், மேகலா, மதிவதனி, றஜீனா, வாகீசன், றஜீபன், சுதேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காண்டீபன், சேயோன், முகுந்தன், கயேந்திரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Shiyamala, We were sad to hear the news about your brother’s passing. Our most sincere condolences. Thavavathanee & Bavaharan