யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், ஊரெழு கிழக்கு
ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராசா கிருத்தியா அவர்களின்
10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரும்
ஓர் உரு கொண்டு வந்ததுபோல்
குலமகளாய் எம் குலம் விளங்க - எம்
குடும்பத்தில் உதித்த திருமகளே
கன்னல் மொழி பேசி எங்கள்
இன்னல்களை மறக்கச்செய்து
மின்னலெனத் தோன்றி மறைந்த
எம் அன்புத் தேவதையே
எண்ணும் போதெல்லாம் - உன்
இனிய வதனமுடன்
பொன்னான உந்தன்
போற்றத்தகு குணங்களையும்
எந்நாளும் பெருமை தரும்
ஏழ்பிறப்பும் தொடர்கின்ற
உயர்வான உன் படிப்பும் பண்பும்
ஒரு நாளும் நாம் மறவோம் - எம்
உயிர் உள்ள வரையினிலே
பத்து ஆண்டுகள் கடந்திடலாம்
பார்த்ததும் கேட்டதும்
சொத்துபத்து இழந்திடலாம்
பத்து மாதம் சுமந்ததாயும்
பாசத்தைக்கொட்டி
வளர்த்த தந்தையும்
இரத்த உறவுகள்
உற்றத்தார் சுற்றத்தார்
அத்தனை பேரும் - உன்
அன்பு முகத்தை மறக்க முடியுமா
ஆனந்த நினைவுகளை
அழிக்க முடியுமா
எத்தனை வருடங்களானாலென்ன
எத்தனை ஜென்மம் எடுத்தாலென்ன
முத்திரைப் பசும் பொன்னாய்
உத்தமியாய், வித்தகியாய்
இத்தரை போற்றும் இனிய குணங்களுடன்
இனிது வாழ்ந்து இறைவனடி ஏகிய
தெய்வத்திருமகளே தீராது எம் துயரம்
சாந்தியை இழந்தோம்
உன் பிரிவால் - இருந்தும்
சாந்தியடையட்டும் உன் ஆன்மா
எனஆண்டவனை வேண்டுவதன்றி - நாம்
ஆற்ற முடிந்தது வேறில்லை