
பிரான்ஸ் Vincennes ஐ பிறப்பிடமாகவும், Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராசா அஸ்வீகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-03-2023
அன்பு மகனே என்
அஸ்வீகன் உன் வதனம்
எந்தன் விழியிரண்டில்
எழிற்படமாய்த் தெரிகிறதே
இருபது வயது வரை
இற்றரையில் வாழ்வதற்கா?
பிறப்பெடுத்து வந்தாய் நீ
அன்பு அடக்கமுடன்
அனைவரும் பாராட்டும்
பண்பை அணிகலனாய்
பரிசளித்த பெருமகனே
குன்றில் விளக்கெனவே
குவலயத்தில் ஒளிகொடுப்பாய் என்றிருந்தோம்
பகற்கனவாய் எல்லாமும் போச்சுதடா!
நாங்கள் அழுத கண்ணீர்த் துளிகளில் ஒன்றாவது
உன்னை மீட்டு வந்து எம்மிடம் சேர்த்து விட்டதா?
அழகையும் அறிவையும் அள்ளிக் கொடுத்ததால் தான்
இறைவன், உன் ஆயுளை சீக்கிரம் பறித்து விட்டானோ?
நீயில்லா விடியல்கள்
நீயில்லா இரவின் உறக்கங்கள்
நீயில்லாத நிகழ்ச்சிகள் என
தினம் தினம் உன்னை எண்ணியே
ஒரு வருடம் உருண்டோடி விட்டது
என் அச்சுக் குட்டியே!
என் அழகிய செல்வத் திருமகனே!
நீ அனுபவித்த துன்பங்கள் எல்லாம் அகன்று
இறைவனோடு உன் ஆத்மா அமைதியாய் சாந்தியடைய
எல்லோரும் சேர்ந்து பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
Summary
-
Vincennes, France பிறந்த இடம்
-
Chelles, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Mes condoléances pour ce jeune homme. Paix à son âme ?️?️?️courage à sa famille ?