1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துரைராஜசிங்கம் சந்திரசேகரன்
(சந்திரன்)
வயது 62
அமரர் துரைராஜசிங்கம் சந்திரசேகரன்
1963 -
2025
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 18-04-2026
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜசிங்கம் சந்திரசேகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம் நினைவால்
வாடுகிறோம் அப்பா! தினம் ஒரு
சந்தோசம் தந்தீர்கள் இன்று தினம் தினமாய்
உங்களுக்காய் அழுகின்றோம் அப்பா...
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம் தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி இன்றும்
எங்கள் விழிகளில் வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்