Clicky

கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 13 JUL 1946
இறப்பு 01 NOV 2020
அமரர் துரைராசா மகேந்திரராணி 1946 - 2020 வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யா. வல்வெட்டித்துறை ஊரிக்காடைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு கெருடாவில் கோணாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா மகேந்திரராணி அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் துரைராசா அவர்களின் அன்புத் துணைவியும்,

முருகதாஸ்(லண்டன்), நளாயினி(லண்டன்), ராமதாஸ்(கெருடாவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

எங்களை அன்போடும், பண்போடும், பாசத்தோடும்
அரவணைத்து பாதுகாத்து வந்த - எங்கள்
இதய தெய்வத்தின் திடீர் மறைவை எண்ணி
மனம் உடைந்து வாடி நிற்கின்றோம்.
கண்மூடி திறக்கு முன்பே காலவன் உங்களை
கவர்ந்து சென்றது ஏனோ???
நீங்கள் இல்லாத வீட்டில் புன்னகையும் மறைந்து
வசந்தங்களும் தொலைந்து போய்விட்டதே அம்மா!
உங்கள் உறுதியான புத்திமதிகளும்
கனிவான பேச்சும் இனி எப்போது கேட்போம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
கண்ணீர்ப் பூக்களால் பிரார்த்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்