Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 NOV 1976
இறப்பு 01 DEC 1995
அமரர் துரைராஜா ஜெயகரன்
வயது 19
அமரர் துரைராஜா ஜெயகரன் 1976 - 1995 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா ஜெயகரன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே 

என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?

மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?

நாம் ஆற்றுவதற்கு வார்த்தையில்லை
சாவதற்கு காலனவன் வரவில்லை
இருண்ட இவ்வுலகில் வாழவும் முடியவில்லை
சாகவும் முடியவில்லை செய்வது
எது என்று தெரியாது தவிக்கின்றோம் ஐயா!
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!

நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!

விண்ணில் நீ விரைய விதிவரைந்த சோதனையால்
கண்ணில் நீர் சொரிந்து கலங்கி நாம் அழுகின்றோம்
உன் கோலம் அழிந்திடலாம் குரலோசை ஒய்ந்திடலாம்
ஞாலம் உள்ளவரை உனைமறவோம் நாமென்றும்
பெற்றோரையும் மறந்து உடன் பிறந்தோரை பிரிந்து
உற்றாரை மறந்து உறவுகளைத் தான் துறந்து
கொற்றவனே நீயும் கொடும் வழியே போனாலும்
உன் சுற்றம் முழுதும் உந்தன் ஆத்மா சாந்திக்காய்
நித்தம் ஆண்டவனின் நிழலடியை வேண்டுகின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்