யாழ். வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை ஆலடியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி விசாகராசா அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி(சண்முகலிங்கம்) அமராவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற காராளபிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்தலட்சுமி(காஞ்சனா) அவர்களின் அன்புக் கணவரும்,
திலக்ஷினி(ஆசிரியை- சத்தியசாயி பாடசாலை மானிப்பாய்), ஜெனோஷா(1ம் வருட மாணவி- விஞ்ஞான பீடம் கொழும்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற சாந்தராசா, சாந்தலட்சுமி(கனடா), தியாகேஸ்வரன், காலஞ்சென்ற உதயசூரியன், உதயேஸ்வரன், கோடீஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜயலட்சுமி(ஓய்வு நிலை ஆசிரியை), காண்டீபன்(பிரான்ஸ்), கணநாதன்(நோர்வே), காங்கேயன்(பிரான்ஸ்), கலாமதி(சுவிஸ்), கோமதி, தயாபரன்(ஆசிரியர்- மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்), கஜேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரையான்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.