யாழ். ஐந்து சந்தி மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா மகேஸ்வரன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, நீலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகம்(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலச்சந்திரன்(ஜேர்மனி), கனகாம்பிகை(பபி- ஜேர்மனி), ஜெயச்சந்திரன்(சுவிஸ்), ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவமலர், ஜெயலிங்கம், அருந்ததி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதாம்பாள், நடராஜா மற்றும் சந்தாவதி, கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கராசா, இராசேஸ்வரி, அழகம்மா, சங்கானை டிங்கர் மணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜன், சுவதா, அபிரா, அஜந்தா, காவியன், கரிகாலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP