யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரெளபதிதேவி அன்னலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை விட்டு நீர் சென்று
பத்தாண்டு கடந்ததுவோ..
நம்ப மனம் மறுக்கிறது
உமை எண்ணும்போது
மனம் அழுகிறது
ஆருயிரான எம் அம்மா!
எம்மை நேரியராய் வளர்த்து
செம்மையுற வாழவைத்த தெயவமே!
வாழ்வாங்கு வாழ்ந்து வானுறைந்து
ஆண்டுகள் பத்து ஆனதம்மா
மீண்டுமொரு கணம் காணமாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறதே எங்கள் மனம்
கண்கள் கசிந்தொழுகி நெஞ்சம் கனக்கிறது
நெடுந்தொலைவு சென்ற
எங்கள் அம்மாவை நினைத்து
உங்கள் பிள்ளைகளாய் பிறக்க
பேறுபெற்று வந்தோம் அம்மா
நேசம் குறையாத நெடுவுறவாய்
உங்கள் மருமக்கள் வாடுகிறார்.
பேரப்பிள்ளைகளோ அம்மம்மா, அப்பம்மா போலவொரு
அருந்தெய்வம் இல்லையேன கண்கலங்கி நிற்கின்றார்
ஆண்டுகள் பத்து ஓடுயதம்மா!
ஆனால் எம்முள் உறைந்து போன
நினைவுகள் உயிருள்ளவரை நீளுமம்மா!
காலம் உயிர் பிரிந்து கலங்க வைக்கும் எனினும்
தெய்வமாய் இருந்தெமது குலம் காக்க வேண்டுமம்மா..
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details