Clicky

கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 25 DEC 1937
இறப்பு 19 AUG 2026
திரு தியாகராஜா புவனசுந்தரராஜா (மாஸ்டர்)
வயது 88
திரு தியாகராஜா புவனசுந்தரராஜா 1937 - 2026 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா புவனசுந்தரராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அன்பும் பாசமும் அமைதியும் நிறைந்த
எங்கள் மைத்துனரே!
மீளாத்துயில் கொண்டு
எம்மை ஆறாத்துயரில்
ஆழ்த்திச் சென்று விட்டீர்களே!!

கலையாத நினைவுகளுடன்
மறவாத நாளாக இருப்பதற்காகவா
மகளின் பிறந்த நாளன்று
சிவபதம் அடைந்தீர்களோ?

மனைவி கரம் பிடிக்க
புதல்வன் பாலூட்டி தலைகோத
மருமக்கள், சகோதரி, மைத்துனர் உடன் இருக்க
இம் மண்ணுலக வாழ்கை போதும் என்று
காற்றோடு காற்றாய்
வானுறையும் தெய்வங்களுடன்
இரண்டறக் கலந்தீர்களோ?

உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த்துளிகளை
காணிக்கையாக்கின்றோம்!!

உங்கள் பிரிவால் வாடும்
உதயகுமார் பாமினி குடும்பத்தினர்(மைத்துனி)
தவகுலரத்தினம் மாலினி குடும்பத்தினர்(மைத்துனி)

தகவல்: பாமினி மற்றும் மாலினி குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிமல்ராஜ் - மகன்