யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகராசா பாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புடன் பாசத்துடனும் வளர்த்த
எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் எட்டுப் பிள்ளைகளைப் பெற்று
எட்டுத் திக்கும் அனுப்பி விட்டு
வெறும் தொலைத் தொடர்பு மூலம் உறவு வளர்த்தீர்கள்
எல்லோருக்கும் எத்தனையோ இடப்பெயர்வு வந்தும்
என்ன நடந்தாலும் பறுவாயில்லை
என் வீட்டிலேயே நான் இருப்பேன்- என்று
86 அகவை வரை வாழ்ந்து முடித்த வீரத்தாயே
கடைசிவரை உங்களுடைய வேலைகளை
யாரிடமும் கடமைப்படக் கூடாது என்று
நீங்களே செய்தீர்களே!
இது தான் உங்களது தனித்துவம்
வாழ்ந்த வீடும் பழகிய உறவுகளும்
நடந்து திரிந்த தெருக்களும், வீட்டுமுற்றமும்
உங்களது இறுதி ஊர்வலத்தின் கதையைச் சொன்னது.
உங்கள் பிரிவால் வாடும்
மருமகன், மகள், பேரப்பிள்ளைகள்
உங்கள் ஆன்மா ஆறுதலடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி..
எம் குலவிளக்கின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்கள், மலர்மாலைகள் சாந்த்தியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞலி 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
அம்மம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். துஷி குடும்பம்