10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தியாகராஜா சரஸ்வதி
1942 -
2011
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்.புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா சரஸ்வதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அம்மாவே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அம்மா.
எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப் படிகளில் அம்மா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்.
நீங்கள் வாழ்ந்த மண்ணிலே
நீங்காத பெருமை தேடி பிள்ளைகள் எம்மையும்
நல்வழி காட்டியே நானிலம் போற்றும் பண்பில்
உருவாக்கிய தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்