Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 OCT 1941
இறப்பு 09 JUL 2014
அமரர் தியாகராஜா கதிரவேல் 1941 - 2014 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வேலணை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா கதிரவேல் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே பாசத்தின் பிறப்பிடமே
எம்மை விட்டகன்று ஒரு சகாப்தம்
ஆயினும் உங்கள் நினைவுகள் எமக்கு பல சகாப்தம்...

பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.

நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!

பத்து வருடம் ஆகியும் பத்து நிமிடம்
கூட உங்களை மறக்க முடிய வில்லை
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதை விட்டு விலகாது.

பத்தென்ன பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் - எம்மை
பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த - எமது

அன்புத் தெய்வமே அப்பா உங்கள் நினைவலைகள் என்றும்
எம் நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute