யாழ். ஆனைக்கோட்டை 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா கிருபாகரன் அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காராளபிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி(ஆசிரியை- நவாலி ஸ்தான அ.மி.த.க பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன்(பிரான்ஸ்), சங்கீர்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கருணாகரன், பிரதீபா, பாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பநாதன், காண்டீபன், காந்தலட்சுமி, கணநாதன், காங்கேயன், கலாமதி, கோமதி, தயாபரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எருக்கலம்பிட்டி(கரையாம்பிட்டி) இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிருபாண்ணாவினுடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொண்டு அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்