உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகசூரியன் திவாகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு அரவணைப்பில் உறைவிடமாய் பண்பில் சிகரமாய் அழகில் முருகனாய் எங்களோடு வாழ்ந்து எம்மை நிற்கதியாய் விட்டு சென்ற எம் அருமை மகனே திவா எத்தனை ஆண்டுகள் வந்து சென்றலும் உன் நினைவுகள் மறையுமோ ஐயா- ராசா
உன்னுடையா புன்சிரிப்பும் எல்லோர் மனம் கவரும் அழகு தமிழ் ஆங்கில பேச்சும் இனி எப்போ நாம் காண்போம் ஐயா உன் செய்தி கேட்டு பதை பதைத்து நாங்கள் ஏங்கி நிற்க நீங்கள் பறந்தோடி மறைந்த மாயம் என்ன- ராசா எங்கள் மனத்துயரங்களையும் கண்ணீரையும் துடைக்க மீண்டும் வந்திடுவாயா- திவா
என்றும் அகலாத உன் நினைவுகளுடன் எங்கள் அன்பையும் கண்ணீரையும் மலர்ந்த வாசனை பூக்களாய் அர்ச்சித்து உங்கள் ஆத்மா நற்சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்- ஐயா
என்றும் உங்களது பிரிவால் நினைத்து வாடுகின்ற அன்பு அப்பா, அம்மா, தங்கைமார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
Our King?