கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திவாகர் றஜீவ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் மகனே எங்கு சென்றாய்?
என்னை விட்டு எங்கு சென்றாய்?
நான் உண்பதுவும் உடுப்பதுவும் உனக்காய் அன்றோ!
வீட்டில் இருப்பதும் சமைப்பதுவும் உனக்காய் அன்றோ!
உயிர் கொண்டு வாழ்வதுவே, உனக்காய் அன்றோ!
என்னை விட்டு எங்கு சென்றாய் எம் மகனே!
அம்மா சாப்பிட்டீங்களா என்று
உண்ணும் முன் எப்போதும் கேட்ப்பாயே
இனி என்னை யார் கேட்ப்பார்?
என் கண்ணில் நீர்வழிய ஒரு போதும் நீ விட்டதில்லை
அழாதே அம்மா என்று எப்போதும் சொல்வாயே....
இன்று என் கண்ணீர் ஆறாய் ஓடுதய்யா
உன் அறையை பார்க்கின்றேன் எழுந்துவந்து
ஆறுதல் கூறாயோ என் மகனே?
உனக்காகவே வாழ்கிறேன் என்றறிந்து
எனக்காகவே வாழ்ந்த தெய்வமே
உன் இன்முகம் ஒருமுறை காட்டாயோ?
என் முகம் பார்த்து ஒருமுறை உன் அந்த
அழகிய புன்சிரிப்பை உதிராயோ?
அம்மா.. அம்மா என்று ஒருமுறை
வாய்நிறைய அழைக்காயோ என் மகனே?
என்றும் என்னுடனே வாழும் ஜீவன்
என் நித்திய ஜீவன் நீயே
என்றென்றும் என்னுடனே கூட இரு மகனே
என்றென்றும் என்ஜீவனில் கலந்திரு மகனே
என் சுவாசக் காற்றே நீ தானய்யா!
- அம்மா
Rest in peace