

-
11 OCT 1951 - 18 JUL 1998 (46 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு வயிரமுத்து அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
புங்கை மண் பெற்றெடுத்த பொக்கிசமே!
வைரமுத்து பரம்பரையின் ஒளிவிளக்கே!
கல்வியினால் புகழ்தேடி மண்ணுலகில் உயர்ந்தவரே!
பண்பாளனே! அன்பானவனே! என் ஆருயிர் - அப்பா
அறியாப்பருவத்தில் உனக்கு கொள்ளி வைத்த அந்த நொடி
இன்றும் நெஞ்சோடு உறுத்த பாதியிலே
எம்மை பரிதவிக்க விட்டுச் சென்று இன்றோடு
இருபத்தைந்து ஆண்டுகள் சென்றுவிட்ட பின்னும்
அப்பா - மகன் என்ற இரத்த பந்தம் மாத்திரம்
இந்த உலகு உள்ளவரை தோறும் தொடரும்!!!
என் மூச்சானவனே!
காலத்தின் கைப்பிடியில் நீங்கள் லண்டனிலும்
நாங்கள் ஈழத்திலும் வாழ்ந்த நாட்களில்
உங்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி
தூரமான பொழுதில் அப்பா என் படத்தினை
நீங்கள் தலைமாட்டில் வைத்தபடி எந்நேரமும்
கொஞ்சிக்கொண்டிருப்பீர்களாம்.
இறக்கும் தறுவாயிலும் என் பெயர் சொல்லி கண்ணீர் விட்டதாய்
மச்சான்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.
அப்பா ! உலகம் கூறும் படைப்பின்
கதைகள் உண்மை என்ற வட்டத்துக்குள் வந்து விட்ட பின்பு
என் ஆழ்மனதின் அடியில் இருபத்தைந்து ஆண்டுகளாய்
தீராத ஆசை - நீங்கள்
என் மகனாய் பிறக்க உங்களுக்கும் எனக்குமான உள்ளார்ந்த
பரிசத்தை என் வாழ் நாட்கள் தோறும் சுமந்திட வேண்டும்!!!!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
