யாழ். வதிரி கரவெட்டி நல்லாதோலை பெரியபாதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கணபதிப்பிள்ளை அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அருமைநாதன், ராஜினி ராஜரட்ணம், சிவசக்தி பாலசுப்பிரமணியம் மற்றும் கணபதிப்பிள்ளை(சிவா), ரங்கநாதன்(ரங்கா), காலஞ்சென்ற யோகநாதன், குமுதினி கமலேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை கந்தையா, அன்னப்பிள்ளை பொன்னையா, குஞ்சியார் கந்தசாமி(ராசம்), முருகேசு மற்றும் செந்தையா(ரத்தினம்), காலஞ்சென்ற கிருஷ்ணன்(முத்து), தெய்வானை சிதம்பரப்பிள்ளை(செல்லம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜரட்ணம், பாலசுப்பிரமணியம், கமலேந்திரன், சாந்தி கணபதிப்பிள்ளை, லதா ரங்கநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷிகா, ஆர்த்திகா, சஹானா விவேக், ஏஞ்சலா, சபிதா, சபேற்னா, அக்ஷனா, கரிகாலன், கவிவர்மன், கயல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எம்மனத்தும் பெருமை கொணர் ஐயா ! சம்மதித்து விடையுண்டோம் சுவர்க்கமெய்ய.... இம்முறுத்து நீர் வாழ்ந்த உயர்வாழ்வு தான்கண்டு, நிம்மதியாய் இறைஞ்சுகிறோம் துயில்கொள்வாய் அஞ்சலிகள்...........