யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு பராசக்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 10 ஆனதம்மா நீங்கள்
எங்களை விட்டு மறைந்து
ஆண்டு ஒன்றல்ல ஆயிரமானாலும்
ஆறதம்மா உங்கள் இழப்பு
அன்பின் நிறைகுடமாய்
பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் இருப்பிடமாய்
பார்ப்பவர் மனங்களில்
பசுமையாய் நிலைத்திருந்தீர்கள்
வாஞ்சையுடன் வருடிய கைகள்
நேர்த்தியாக எமக்கு கற்று தந்த
பணிகள் தன்னம்பிக்கையுடன்
வாழவைத்த வார்த்தைகள்
பக்கத்தில் இருந்து பேசிய கதைகள்
இப்போதும் எம்முள் நிலைத்து நிற்க்கும்
உங்கள் இழப்பு
எம் வாழ்க்கையில் தீராத சோகம் அம்மா
எண்ணம் நலிகின்ற நேரத்தில் முன்னேற
நம்பிக்கை கொள் என்று தினமும் சொல்வீர்கள் தாயே
உங்களுக்கு மட்டும் தான் இரு பிறப்பு
நீங்கள் எங்களுக்காக பிறந்தது
எங்களுக்கு பிறப்பு தந்தது
உங்கள் அன்பின் அணைப்பும் வலிக்காத
உங்கள் தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா
அளந்து பார்க்கும் உறவுகளுக்கு
நடுவில் அளக்கவளரும் உறவம்மா
உங்கள் உறவு சரி என்று பட்டத்தை
சட்டேன்று உரைப்பீர்கள்
நீதிக்காக நிமிர்ந்து நின்று
போராடுவீர்கள் உறவுகளை
எண்ணி உள்ளம் நெகிழ்வீர்கள்
மற்றவர் உயிரை மதிக்கும் மாண்பே
பண்பினால் உங்களை வெல்ல பாரினில்
யாரும் இல்லை
கள்ளம் கபடம் இல்லாத
நம் தந்தையின் உள்ளமும் கதறுகின்றது
உங்களின் பிரிவால் தாங்காத துயர் தந்து
தனியாக நீங்கள் சென்றதால் நீங்காத
உங்கள் நினைவுடன் நடை
பிணமாய் தவிக்கின்றார் நம் தந்தை
காலங்கள் கடந்தாலும் உயர்வான
உங்கள் ஆத்மாவின் சந்தி வேண்டி
இறைவனை எப்பொதும் பிராத்திப்போம்
ஓம் சாந்தி...!!!!
அன்புடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்