யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா திருஞானசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும், 30-10-2021 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Shenley Brook End Village Hall, Church End Rd, Shenley Brook End, Milton Keynes MK5 7AA, United Kingdom எனும் முகவரியில் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.