
யாழ். நெடுந்தீவு மத்தி 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் பிலோமினா அவர்கள் 04-05-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப்பு ஆகுதாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மடுத்தீன் சலோமை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
மரிய தேவதாசன்(பிரான்ஸ்), மேரி யோசேப்பின்(சிட்னி – அவுஸ்திரேலியா), திருஞான தீபசெல்வம்(இந்தியா), காலஞ்சென்ற நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருளப்பு, கிறிசாந்து, மரியம்மா, ஆபிரகாம், திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வமலர், மருதநாயகம்(மருது), தேன்மொழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அமிர்தநாதர் மற்றும் கிறிஸ்ரபெல் ஜெயராணி, சகாயமேரி சறோயா, மேரிமென்ரேஸா, ஞானசந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
சாந்தி, செல்வின், காருன்யா, அனிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் நெடுந்தீவு மத்தி புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.