Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 08 APR 1932
மறைவு 28 OCT 2022
அமரர் தில்லையம்பலம் விஸ்வலிங்கம்
முன்னாள் வர்த்தகர் கனகா ஸ்டோர்ஸ், பிரபா பேக்கரி
வயது 90
அமரர் தில்லையம்பலம் விஸ்வலிங்கம் 1932 - 2022 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ennepetal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் விஸ்வலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!
  

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 29 Oct, 2022