மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லைநாதன் சபாநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்களுடன் பயணித்த காலங்கள்
எங்கள் மனதில் என்றும் பசுமையாக இருக்கும்!
What we once enjoyed with you
and deeply loved we can never lose,
for all that we love about you
has becomes part of us!
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே,
தாய் தந்தை போற்றிய தனையனே,
உன் உழைப்பால் எமை உயரவைத்து
நின் சுற்றம் நண்பர்கள் போற்ற
பெருவாழ்வு வாழ்ந்தவனே
நீ என்றும் எம் நெஞ்சில் வாழ்வாய்!
உங்களின் சுறுசுறுப்பு, விருந்தோம்பல்,
உதவி செய்யும் தாராள குணம், தந்தைக்கு நிகராக
எங்களை நேசித்து வழி நடத்திய பாங்கு
இவை என்றென்றும் எம் மனக்கண்ணில்!
இன்முகம் காட்டி நகைச்சுவையுடன்
இனிய சொல் பேசி, நம்பிக்கையான
உன் சேவையால் வாடிக்கையாளர்களைக்
கவர்ந்து, Auto இயந்திர திருத்த வேலைகளுக்கே
இலக்கணம் வகித்த எம் நண்பா
உன் காலடிச்சுவடுகள் என்றும் எங்களுடன்!
கனிவான உபசரிப்பு சலிக்காமல் படைக்கும் அறுசுவை விருந்து,
இசையில் ஆழ்ந்த ரசனை, மகிழ்ச்சியில் ஆடும் நடனம்,
சலிப்பில் கூறும் கும்மி, இவற்றிற்கும் மேலாக
பாசமுள்ள குடும்பத்தலைவனாய் நீ வாழ்ந்த வாழ்க்கை
என்றும் அழியாத காவியமாய் எம் மனதில்!
வாழ்வில் அறம் போற்றி, இனம் போற்றி,
சூழ்ந்த நட்புப் போற்றி, சுற்றம் போற்றி,
ஊர்போற்ற, உலகம் போற்ற வாழ்ந்தாய்,
பிறவிப் பெருங்கடல் நீத்தாய் போற்றி போற்றி...