
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் மணிமேகலை அவர்கள் 08-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கச்சிஅம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஷ்(கனடா), சுமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாளினி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரகுநாதன்(கனடா), மனோன்மணி(இலங்கை), பாக்கியநாதன்(பிரான்ஸ்), தனராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சரோயினிதேவி, மங்கயற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாவதி, ஆறுமுகம், செல்வமகள், தங்கராஜா, காலஞ்சென்றவர்களான தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜன், லருசன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல 66/25, இந்து மகளிர் ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.