2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:08/12/2024
யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலகவதி செல்வராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே...
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள்!
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன...
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் கணவர்,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.