மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலகவதி தேவி பஞ்சலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு காலம் இமைப்பொழுதில் போனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை அம்மா இவ்வுலகில்!
அம்மா எங்கள் உயிருடன் கலந்திட்ட
உங்கள் உதிரம் எம் உடலில் உள்ளவரை
நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள்
எம்முடன் நாம் இவ்வுலகில் உள்ளவரை!
மறுபிறவி என இருந்தால் மீண்டும் நாம்
உங்கள் கருவறையில் புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில் நாம் தவழ வேண்டும் அம்மா!
வானத்தின் நிலவாய் வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும் உங்களுக்கு
எங்களது நினைவஞ்சலிகள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Our heartfelt condolences. May her soul rest in peace