மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டி ஜானகி லேனை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி தவபுத்திரன் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தவபுத்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகணேசன், சிவானந்தன், சிவபாலன், சிவதாசன், சிவரூபன், பாஸ்கரன், வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானபூரணம், சிவனேஸ்வரி, சிவகாமி, உமாதேவி, நிர்மலா, சத்தியா, கருணைவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-02-2019 மு.ப 08:00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபம். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!