மரண அறிவித்தல்
மண்ணில் 06 JUL 1948
விண்ணில் 16 AUG 2022
திரு திலகராயர் கைலநாதன் 1948 - 2022 நாரகென்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பு நாரஹன்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கானை தேவாலய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திலகராயர் கைலநாதன் அவர்கள் 16-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 

அன்னார், சுண்டுக்குளியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திலகராயர் சிவபாக்கியம் தம்பதிகளின் மகனும், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாராயணலிங்கம்(ஓவசியர்) அரியரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

ரஞ்ஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷன்(முகாமைத்துவ உதவியாளர் - யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்), தனுஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லலிதலக்‌ஷ்மி(தேசிய சேமிப்பு வங்கி மேற்தரக்கிளை, யாழ்ப்பாணம்), ஜெசிக்கா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தில்லைநாதன், சிவநாதன், ஜெகஜோதி, ஞானஜோதி, மங்களஜோதி, காலஞ்சென்ற கேதீசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சந்திரமோகன், ரூபன்(கனடா), காலஞ்சென்ற ஜீனி, அனுஷியா, செல்வநாயகம், முத்துக்குமாரசாமி, துரைரட்ணம், அஜந்தா ஆகியோரின் மைத்துனரும்,

திஜஷ்வின், அபீனா, கெவின், தாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2022 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஞ்சினி - மனைவி
நிரோஷன் - மகன்
தனுஷன் - மகன்