யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு M.S லேனை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா கனகேஸ்வரி அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகலிங்கம் தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
லோகேஸ்வரி, அகிலேஸ்வரி, இலங்கேஸ்வரி, கேதீஸ்வரி, அனுரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரன், லோகேஸ்வரன், குமணன், ஜூட் அன்ரனி, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான லோகநாதன், ஏகாம்பரநாதன், பேரின்பநாதன் மற்றும் ருக்குமணிதேவி, நாகேஸ்வரி, குகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் மகேஸ்வரி, புஸ்பராணி மற்றும் தேவராணி, யோகமலர், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பூபாலசிங்கம், மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுலக்ஷன், அபிலக்சனா, விஷ்னுகா, விஷ்னுகாந், சிவகரன், புருசோத், கீர்த்திகா, திக்சாந், தக்சாந், மேரி யக்சிகா, தேவசாந், தக்சிகா, ஜசிகா, அதிசியராயன், சபரீசன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அதிரன், அத்மிகா, மகாலக்ஷி, கார்த்தியாசினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் கோண்டாவில் கிழக்கு M.S லேனில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP Please accept our heartfelt condolences