யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bois-Herpin ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தேவதாஸ் நாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாட்கள் போனாலும் மெளனமாக
எனக்குள்ளே என் மனசு அழுவதை
நீங்கள் உணர்வீர்கள் உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் !
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும் ஒளியாய் ம
லர்கின்றன சிந்தை குளிர சிரிப்பொலி
ஒலிக்கும் அன்பு வதனம் எங்கே?
31 நாட்கள் விரைந்தே போனாலும்
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய் நினைத்தே
நாங்கள் வாழ்கின்றோம்....
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-04-2026 சனிக்கிழமை அன்று நடைபெறும்.