யாழ்.காரைநகர் பத்தர்கேணியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசுந்தரம் தேவரஜீவ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை விட்டு பிரிந்து
பத்தாண்டு ஆன போதும்
உன்னை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
எங்கள் அன்பு மகனே...
உன்னைத் தேடி எங்கள்
கண்கள் களைத்ததட மகனே
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதய்யா...
எங்கள் அன்பு மகனே...
எப்போதும் உன் நினைவுடனே உன் அம்மா அப்பா...
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன்
ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே...
ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உன் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
காலத்தின் கட்டளையோ- ஐயா
இன்று நீ கடவுளாகினாய்...
எத்தனை உறவுகள் எமக்கிருந்தாலும்
மாமா என்று சொல்ல ஏங்கித்
தவிக்கின்றோம் உங்களை நினைத்து
எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது மாமா...
பெரியப்பா என்று அழைத்திட நீங்கள் இல்லை
உங்களின் அன்பு மிகப் பெரியது
அதை யாராலும் ஈடு செய்ய முடியாது..
என்றும் உங்கள் நினைவுடன் உங்கள் பெறாமக்கள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!