2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 MAY 1936
இறப்பு 27 NOV 2019
அமரர் தேசிங்கராசா கமலாம்பிகை 1936 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை அரசமுறிப்பை வதிவிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த தேசிங்கராசா கமலாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 05-12-2021

அம்மா! நீங்கள் மண்ணில்
மறைந்து ஆண்டுகள் இரண்டு ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய்
என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?

கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!

காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
ஆண்டு இரண்டு போனாலும்
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு

நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞானவல்லி - மகள்
சிவா - மகன்
தேவா - மகன்
பவானி - மகள்
ஈசன் - மகன்
பவளம் - மகள்