யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
“அன்புள்ள அம்மா ஓடி மறைந்ததம்மா
ஆண்டு ஒன்று உன் நினைவுகள் ஓராயிரம்
ஆண்டு சென்றாலும் மறைந்திடுமா?
விழிகள் களைப்படைந்து கண்ணீரில் மிதக்கின்றன
இறையருள் கொண்ட என் தாயே இரக்கப்பட்டா
இறைவனும் உன்னை எடுத்துவிட்டான்”
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து ஓராயிரம்
ஆண்டானாலும் உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம்!
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!
வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோளே இல்லாத அன்பு
சுயநலம் இல்லாத இதயம்
வெறுப்பை காட்டாத முகம்
அம்மா....
உம் அகவை 88 தணை விண்ணகத்தில்
நினைவுகூற எம் குடும்ப ஆணிவேராம்
உம் துணைவர் பாக்கியநாதரையும் அங்களைத்து
உம் தலைப்புத்திரன் றெஜீசையும் அழைத்துக்கொண்டு மற்றும்
மூன்று பிள்ளைகளாகிய கெலன், டீயூக், யோகன் இவர்களுடன்
ஒரு பேரப்பிள்ளை கிளின்ரனும் சேர்த்து உங்களுடன் மொத்தம்
ஏழு பேர் இணைந்து உங்கள் பிறந்ததினத்தையும்
உங்கள் மணவாழ்க்கையின் 71 வருட நிறைவினையும்
அங்கு உங்கள் ஆன்மா நினைவுற இங்காறு பிள்ளைகள் யாம்
பரிதவிக்கின்றோம் இப்பாரினிலே உமையல்லாது.!!
“காலதேவன் கணக்கில் இதுவும் ஒன்று”
ஓராண்டு கழிந்தாலும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலாதம்மா.
உம் ஆன்மா விண்ணகத்தில் நித்திய இளைப்பாற்றியை
அடைய இறைவனை வேண்டுகிறோம்...
ஈரவிழிகளுடன் உங்கள் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,
சகோதரங்கள், மைத்துனர்கள்...
Our deepest sympathies to Amir family and all the family members. May her soul rest in peace. Our prayers are for you during this difficult time. Mr& Mrs. Oscar Singarayer & family -Montreal