யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் இராசமணி அவர்களின் நன்றி நவிலல்.
அன்பின் திருவுருவே அம்மா...!
அம்மா நொடிகள் நிமிடங்களாய்
நிமிடங்கள் மணிகளாய்
மணிகள் நாட்களாய்
நாட்கள் வாரமாய்
வாரங்கள் மாதமொன்றானதுவே
சொப்பனம்போல் மின்னல்
வேகமாய் வந்ததுவே இயற்கை
உம் பிரிவைத் தாங்க முடியவில்லை
எம் இதய தெய்வமே...
எங்கள் முகம் பார்க்கும் முன்னே
ஸ்பரிசன் தொட்டு எங்கள் குணமறிந்து
புரண்டு படுத்தால் இறந்துவிடுமோ
உன்பிள்ளை என்று உன் தூக்கம் துலைத்துவிட்டு
விழித்திருந்த சூரியனே நீ அம்மா..!
எங்களுக்காய் நீங்கள் வாழ்ந்து
செய்த தியாகங்கள் பற்பல
வார்த்தைகள் இல்லாமல் பேசினோம்
கண்கள் இல்லாமல் ரசித்தோம்
காற்றே இல்லாமல் சுவாசித்தோம்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தோம்
எல்லாம் உன் கருவறையில் மட்டுமே
எல்லாவற்றிற்கும் கருவி நீங்கள் தானம்மா
உங்கள் அருமை நாங்கள்
வளரும் போது தெரியவில்லை
எம் பிள்ளைகளை வளர்க்கும் போது
தெரிகிறது வலி என்றால் என்னவென்று
எல்லாம் தாங்கும் இடிதாங்கி நீங்கள் தானம்மா
உங்களோடு வாழ்ந்த வாழ்வை
மறக்க முடியவில்லை அம்மா
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.