5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தெய்வானைப்பிள்ளை முத்து
1935 -
2019
அல்வாய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெய்வானைப்பிள்ளை முத்து அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
ஐந்து கடந்தாலும் ஓயவில்லை
உங்களின் நினைவுகள் அகலவில்லை
அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின்
இறப்பால்.... காற்றாக சுவாசமாய்
எம்முள்ளே வாழ்பவளே நாம்
வீற்றிருந்து விளக்கேற்றி காத்திருப்போம்
உனக்காய் கண்களிலே காட்சி
தர வருவாயா? இன்றோடு ஐந்து
ஆண்டுகள் கழிந்தாலும் உங்கள்
நினைவுகளுடன் மறக்க முடியாமல்
மனதில் நிறுத்தி வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்