அமரர் நன்னித்தம்பி பரமநாதன்
தோற்றம் : 26-12-1932 ; மறைவு: 12-11-1987
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்புவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நன்னித்தம்பி பரமநாதன் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் தெய்வமணி பரமநாதன்
தோற்றம் : 17-08-1945 ; மறைவு: 10-01-2015
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெய்வமணி பரமநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டுகள் கடந்தாலும்
ஆறாத துயருடன் - நாங்கள்
நினைக்க நினைக்க
உங்கள் நினைவுகள் எங்கள் மனம் விட்டு விலகாது
நடந்தது கனவாக மாறவேண்டுமென
இறைவனை கெஞ்சுகிறதே...
எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்
உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!