Clicky

திருமதி தயாபரராசா சாரதாதேவி
மறைவு - 14 JAN 2026
திருமதி தயாபரராசா சாரதாதேவி 2026 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பூட்டி
Mrs Thayapararasa Sarathadevi
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka

கதைகளில் வாழும் என் பூட்டி... எங்களை விட்டு உயிர் பிரிந்த பூட்டி, உன்னோடு நான் வாழவில்லை தான், ஆனால் உன்னைப் பற்றி கேட்ட கதைகள் என் உள்ளத்திலே உன்னை வாழ வைத்தது. பிடிவாதம் உன் அடையாளம், ஆனால் அந்த பிடிவாதத்துக்குள்ளே ஒளிந்திருந்தது ஒரு பெரிய பாசம். "நான் சொன்னால்தான் சரி" என்று சிரிப்போடு சொல்வதும் அரவணைப்பு தானே... ஊர் பிள்ளைகளையும் ஊட்டி வளர்த்தவள் நீ, உன் வீடு ஒரு வீடு இல்லை, ஒரு பசி தீர்க்கும் தாய்மடி. உன் கை மணத்திலே எத்தனை குழந்தை பருவம் தூங்கியிருக்கும்... இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று சொன்ன வார்த்தையில் கூட பசி மட்டுமில்ல, பல தனிமைகளும் தீர்ந்திருக்கும். உன்னுடன் நான் வாழவில்லை பூட்டி, ஆனால் எனக்கும் ஒரு வாய்ப்பு இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கும் போதெல்லாம் உன்னை இழந்த சோகம் மட்டுமல்ல, உன்னைப் பெற்ற பாக்கியம் இல்லாத ஒரு ஏக்கம் தான் மீதமிருக்கு. நீ போன இடம் தெரியாத பூட்டி, ஆனால் நீ இருக்கிற இடம் தெரியும், எங்கள் கதைகளில், எங்கள் பழக்கங்களில், எங்கள் பாசத்தில்... நீ இன்னும் எங்களோடு தான் இருக்கிறாய்.

Write Tribute