Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 12 FEB 1961
இறப்பு 26 JUL 2024
திருமதி தயாபரன் மோகனாம்பிகை 1961 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 107/1, சிவநகரை வதிவிடமாகவும், புதுமுறிப்பு சோலை நகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் மோகனாம்பிகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்...

அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் நீ பெற்ற ஐந்து முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!

முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

வீட்டு முகவரி:
சோலைநகர்,
புதுமுறிப்பு,
கிளிநொச்சி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute